கொசுக்களை விரட்ட

கொசுவிரட்டி மருந்துகளால் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் தாக்குதலுக்கு ஆளாகிறோம். இப்போது கொசுவிரட்டி மருந்துகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்

‘கொசுக்களை விரட்ட பெரும்பாலான மக்கள் கொசுவர்த்தி சுருளை பயன்படுத்துகிறார்கள். கொசுவர்த்தி சுருள் அலெத்ரின், ஈஸ்பயோத்ரின் போன்ற செயற்கையான வேதிப்பொருட்களால் செய்யப்படுகிறது. இந்த கொசுவர்த்தி சுருளை மணிக்கணக்காக பூட்டிய அறைக்குள் எரியவிடும் போது தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். இது ஒரு எச்சரிக்கை மணி. இந்த நிலையிலே கொசுவர்த்தி கொளுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது.

தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூக்கிலும் கண்களிலும் நீர் ஒழுகுதல், மூச்சிரைப்பு போன்றவை ஏற்படும். தொண்டையில் வலி, அலர்ஜி, எரிச்சல், நோய்த்தொற்று ஏற்படும். வறட்டு இருமல் அதிகமாக வரும். ‘சைனசிடிஸ்’ ஏற்பட்டு மூக்கு அடைத்துக்கொள்ளும். சில நேரம் மூக்கின் உள்ளே தொற்றுக்கிருமிகள் அதிகமாகி சீழ் கூட பிடிக்கலாம். ஆரம்ப அறிகுறிகளின் போதே அலர்ஜி உள்ளவர்கள் கொசுவர்த்தி சுருள் பயன்படுத்துவதைகொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகையால் நுரையீரலும் பாதிப்படைகிறது. கொசுவர்த்தி புகை நுரையீரலை அழற்சி அடையச் செய்து ஆஸ்துமா நோயை ஏற்படுத்துகிறது. இதனால் சிலருக்கு ‘ஆஸ்த் மாடிக் அட்டாக்’ கூட ஏற்படும். கொசுவர்த்தி புகையை சுவாசிப்பது என்பது 100 சிகரெட் குடிப்பதற்குச் சமமான விளைவுகளை ஏற்படுத்தும். சிலர் ஏசி செய்யப்பட்ட அறையில் கொசுவர்த்தியை கொளுத்துவார்கள். இதனால் புகையானது அறையைவிட்டு வெளியே செல்லாமல் உள்ளேயே சுற்றும். தொடர்ந்து இதை சுவாசித்தால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் கேன்சராக கூட

Like (0)